காதலனுடன் ப்ரியாமணி ஓட்டம்?!

ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது.
இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது,
"நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன்.
அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இழுத்துக்கிட்டும் ஓடலை. அதுக்கெல்லாம் அவளுக்கு அவசியமே இல்லப்பா..." என்றார் கூலாக.
Comments


Click it and Unblock the Notifications