கடன் சிக்கல்-சரோஜா படத்துக்கு தடை!

By Staff

Saroja Movie Still
வரும் 5ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்த சரோஜா படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் திடீர் தடை விதித்துள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் சரோஜா.

எஸ்பிபி சரண், பிரகாஷ் ராஜ், ஜெயராம், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரமிட் சாய்மிரா வெளியீடான இப்படம் 5-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே படத்துக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் வங்கி சார்பில் வங்கி கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சரோஜா படத்துக்காக மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ. 84.50 லட்சத்தை தயாரிப்பாளர் சிவா கடனாக பெற்றிருந்தார். ஆனால் இதுவரை அதற்கான தவணையைச் செலுத்தவில்லை. எனவே சரோஜா படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும், என வங்கியின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மறு உத்தரவு வரும்வரை படத்தை திரையிட இடைக்கால தடை விதிப்பதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 5ம் தேதி படம் வெளியாகுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X