யுவன் 'திட்டிய' நடிகர்!

நடிப்பில் எக்கச்சக்க ஆர்வம். அந்த ஆர்வத்தைப் பார்த்த இயக்குநர் அமீர், தனது ராம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார்.
இப்போது மீண்டும் அவரே தான் நாயகனாக நடிக்கும் யோகி படத்தில் முக்கியமான வேடம் ஒன்றை தேவராஜுக்கு வழங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பின்னணி இசை சேர்ப்பின்போது, பிச்சைக்காரன் வேடத்தில் வரும் ஒரு நடிகரைக் குறிப்பிட்டு, 'யாருங்க இது...?' என இயக்குநர் சுப்பிரமணிய சிவாவிடம் கேட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
உடனே, பத்திரிகையாளர் தேவராஜ்தான் இவர் என்று சிவா சொல்ல, நம்பவே முடியவில்லையாம் யுவனுக்கு.
'படத்துல இந்த கேரக்டர் பண்ற கொடுமைகளைப் பார்த்து, நான் படம் முழுக்க திட்டிக்கிட்டே இருந்தேன். அத்தனை யதார்த்தமா பண்ணியிருந்தாரு' என்று யுவன் சொன்னதை, பெரிய பாராட்டாக மற்ற உதவி இயக்குநர்களிடம் கூறினாராம் சுப்பிரமணிய சிவா.


Click it and Unblock the Notifications











