twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைஞர் டிவியின் சித்திரம்

    By Staff
    |

    Kalaignar TV
    கலைஞர் டிவி குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான சானல் ஒன்று வெளி வருகிறது. அதற்கு சித்திரம் என்று பெயரிட்டுள்ளனர்.

    சன் டிவி குழுமத்தின் சுட்டி டிவிக்கு கடும் போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கலைஞர் டிவி குழுமத்திலிருந்து ஏற்கனவே கலைஞர் டிவி, இசையருவி, செய்திகள், சிரி்ப்பொலி என நான்கு சானல்கள் உள்ளன. இந்த நிலையில் குழந்தைகளுக்கான சானலாக சித்திரம் மலருகிறது.

    இதுகுறித்து கலைஞர் டிவி தரப்பில் கூறுகையில், புதிய சானல் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். ஏற்கனவே இதற்கான உரிமம் வாங்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டது.

    கலைஞர் டிவி குழுமத்திலிருந்து ஏற்கனவே கலைஞர் ஏசியா என்ற சேனலும் புதிதாக வருகிறது. இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள நேயர்களுக்கானது. சென்னையிலிருந்து இயங்கவுள்ள இந்த சேனல் தாய்காம்-5 செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்படும்.

    இதற்காக தனியாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட மாட்டாதாம். மாறாக கலைஞர் டிவி குழுமத்தில் உள்ள சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்தில் இதில் ஒளிபரப்பவுள்ளனர். குறிப்பாக தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும். இந்திய நேரப்படி தினசரி காலை 3.30 மணிக்கு (தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அப்போது காலை 6 மணி) ஒளிபரப்பு தொடங்கும்.

    கருத்து யுத்தம்..

    இதற்கிடையே கலைஞர் டிவியில் கருத்து யுத்தம், பூவா தலையா என்ற இரண்டு புதிய ஷோக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடங்குகின்றன.

    பூவா தலையா நிகழ்ச்சியை ஸ்ரீபிரியா, குஷ்பு ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இந்த நிகழ்ச்சியில் அலசவுள்ளனராம்.

    கருத்து யுத்தம் ஒரு டாக் ஷோ ஆகும். சண்முகசுந்தரம் இதை தொகுத்து வழங்கவுள்ளார். பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்த கருத்துப் பரிமாற்றமே இது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X