'குசேலன்'-உருகிய கனிமொழி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது.
சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை பிரமிட் சாய்மிரா நிறுவனம் இன்று காலை ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சிறப்பகு காட்சியை குழந்தைகளோடு சேர்ந்து காண வந்திருந்தார் முதல்வர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.
படம் முடிந்த பிறகு நிருபர்களிடம் கூறுகாயில், மிக அற்புதமான திரைப்படம் குசேலன் என்று பாராடினார். படத்தின் இறுதிக் காட்சியில் தான் நெகிழ்ந்துவிட்டதாகவும், ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழில் ஒரு அற்புதமான முயற்சிக்கு வழிகாட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த மாதிரி நல்ல படங்கள்தான் மக்களின் ரசனையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் மையம் அமைப்பின் ஜெகத் கஸ்பர் ராஜூம் இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தார். மிக அருமையான, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்றார் அவர்.
இந்த சிறப்புக் காட்சியைப் பார்க்க குசேலன் இயக்குநர் பி.வாசு, பிரமிட் சாய்மிரா நிர்வாக இயக்குநர் பி.எஸ்.சாமிநாதன் ஆகியோரும் வந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











