குசேலன் Vs பிலூ பார்பர்!

பி.வாசு, பிரியதர்ஷன் இடையிலான டக் ஆப் வார் மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மணிச்சித்திரத்தாழு படத்தில் இவர்களின் 'கதா யுத்தம்' தொடங்கியது.
மணிச்சித்திரத்தாழு படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் இயக்கிய வாசு, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரஜினியை வைத்து இயக்கினார். அப்போதே கதை உரிமை குறித்து வாசுவுக்கும், பிரியதர்ஷனுக்கும் இடையே கருத்து வேறுபாடும், தொடர்ந்து சர்ச்சைகளும் ஏற்பட்டன.
சந்திரமுகி வந்த பின்னர் மணிச்சித்திரத்தாழு படத்தை இந்தியில் பூல் புலய்யா என்ற பெயரில் பிரியதர்ஷன் ரீமேக் செய்தார். அப்படம் சுமாராக அங்கு ஓடியது. ஆனால் இப்படத்தின் கதை, தனது சந்திரமுகி கதை என்று வாசு குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக பிரியதர்ஷனுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.
ஆனால் கோபமான பிரியதர்ஷன், தனது நண்பரான பாசிலின் மணிச்சித்திரத்தாழு படத்தின் கதையைத்தான் திருடி, ஆப்தமித்ராவையும், சந்திரமுகியையும் வாசு இயக்கினார் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய யுத்தத்தில் இருவரும் குதித்துள்ளனர். கத பறயும் போள் படத்தின் ரீமேக்கை தமிழ், தெலுங்கில் ரஜினியை வைத்து வாசு இயக்க, ஷாருக்கானை வைத்து பிரியதர்ஷன்
இயக்குகிறாராம்.
இரு படங்களிலும் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு முக்கியத்துவம் உள்ளது போல கதை மாற்றப்பட்டுள்ளதாக வாசுவும், பிரியதர்ஷனும் கூறியுள்ளனர். இரு படங்களிலும் மூன்று பாடல்களும், சண்டைகளும் இடம் பெற்றுள்ளதாம்.
இந்தியில் கத பறயும் போள் கதையை ரீமேக் செய்யும் உரிமையை தான் ஏற்கனவே வாங்கி விட்டதாக பிரியதர்ஷன் கூறுகிறார். ஆனால் வாசுவோ தமிழ் மற்றும் தெலுங்கு ரைட்ஸை மட்டும்தான் வாங்கியுள்ளாராம்.
அதேசமயம், குசேலன் படத்தை இந்தியில் சப் டைட்டில் போட்டு வட இந்தியாவில் ரிலீஸ் செய்யப் போகிறாராம் வாசு.
இரு படங்களுமே ஆகஸ்ட் 15ம் தேதிதிரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என எல்லா திரையுலகம் பரபரப்பாகியுள்ளது.
விட்ட குறை, தொட்ட குறை போல தொடரும் இந்த யுத்தத்தில் ஜெயிக்கப் போவது யாரோ?


Click it and Unblock the Notifications











