மாயாஜாலின் 'ஜெய் விக்னேஷ்வரா'!

By Staff

Mayajaal Logo
சிவபெருமானின் திருவிளையாடல் தெரியும். விநாயகப் பெருமானின் திருவிளையாடல்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு...

இதோ அந்த சுவாரஸ்யமான கதைகளை ஜெய் விக்னேஷ்வர் எனும் தலைப்பில் அனிமேஷன் திரைப்படமாகவே தந்துள்ளது பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான மாயாஜால்.

அன்புக்கும், பாசத்துக்கும், குறும்புக்கும் பெயர் பெற்ற விநாயகரை ஒரு கடவுளாக மட்டுமே சித்தரிக்காமல், நம் வீட்டு குழந்தையைப் போலவே நெருக்கமாகச் சித்தரித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பு.

ஜேம்ஸ் க்ளிஃபோர்ட் மற்றும் ரஞ்சித்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தின் அனிமேஷன் பகுதிகளை லியோ மெனிசஸ் கையாண்டுள்ளார். கணேஷ் ரமணா இசையமைத்துள்ளார்.

உலகின் முதல் 2 டி பிளாஷ் அனிமேஷன் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ள ஜெய் விக்னேஷ்வர் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும வெளியாகிறது.

ஆங்கிலத்தில் தயாராகியுள்ள இப்படம் இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய மல்டிப்ளெக்ஸ்களிலும் திரையிடப்படுகிறது.

சென்னையில் மாயாஜால், ஐநாக்ஸ், சத்யம் திரையரங்குகளில் வெளியாகிறது.

மாயாஜாலைப் பற்றி...

அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பில் புதிய புரட்சியைச் செய்தவர்கள் மாயாஜால் நிறுவனத்தினர். ஏற்கெனவே கல்லிவர்ஸ் டிராவல் எனும் புகழ்பெற்ற அனிமேஷன் படத்தைத் தயாரித்தவர்கள் இவர்கள்.

இந்தப் படம் 2006-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மாயாஜாலில் இப்போது 10 திரைகள் உள்ளன. விரைவில் இதனை 15 திரைகள் கொண்ட வளாகமாக மாற்றவிருக்கின்றனர்.

இதைத்தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மாயாஜால் கிளைகளைத் திறக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது மாயாஜால், என அதன் தலைமை நிர்வாக இயக்குநர் உதீப் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X