குசேலன் விழா-வராத பசுபதி!

இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடுவின் இன்னொரு நாயகன் ஜெகபதிபாபு தன் நண்பர்கள் புடைசூழ வந்திருந்தார். முதல் சிடியை தன் நெருங்கிய நண்பர் ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு வழங்கினார் ஜெகபதிபாபு.
கத பறயும்போல் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான குசேலனில் நாயகன் ரஜினிதான் என்றாலும், கிட்டத்தட்ட அவரைவிட அதிக காட்சிகளல் நடிப்பவர் பசுபதி என்றுதான் கூறகப்பட்டது. அதாவது இன்னொரு கதாநாயகன் எனும் அளவுக்கு.
படத்தின் துவக்க விழாவின் போது ரஜினி பேசுகையில், இந்தப் படத்தில் பசுபதியின் பங்கு 50 சதவிகிதம் என்றும் தன்னுடைய பங்கு 25 சதவிகிதம் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி பார்த்தால் ரஜினிக்கு கவுரவ வேடம்தான். இதனால் படம் எந்தளவுக்கு விற்கும் என்ற சந்தேகம் இயக்குநர் வாசு உள்பட பலருக்கும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரிஜினல் கதையில் பல மாற்றங்களைச் செய்த வாசு, படத்தில் ரஜினியின் பாத்திரம் முழுவதுமாக வருமளவுக்கு செய்திருந்தார். இதற்காக ரஜினியிடம் போதிய விளக்கங்கள் கூறி தன்னுடைய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.
மேலும் இப்படத்தின் இந்திய, உலக விற்பனை உரிமை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டிருப்பதால், ரஜினி நாயகனாக நடித்தால் மட்டும் விற்பனை செய்யப்பட்ட தொகை வசூலாகும் என்றும் கூறிவிட்டார்கள். இதன் விளைவு, ப்ளிசிட்டி டிசைன்கள் அனைத்திலும் ரஜினியின் படங்கள் மட்டுமே இப்போது இடம் பெற்றுள்ளன.
மேலும் படத்தில் பசுபதியின் பாத்திரம் 25 சதவிகிதமாகச் சுருக்கப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பசுபதியோ இயக்குநர் வாசுவோ வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த குசேலன் விழாவில் பசுபதி பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் வரவே இல்லை. நாயகிகள் நயன்தாரா, மீனா ஆகியோர் வளிப்புறப் படப்பிடிப்பில் இருந்த்தால் விழாவுக்கு வரவில்லை என்று கூறப்பட்டது.
விழாவில் ரஜினி உள்பட யாரும் பசுபதியின் வேடம் பற்றியோ, அவர் விழாவுக்கு வராதது குறித்தோ எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பேசாவிட்டாலும், வெளியே பேச ஆரம்பிச்சிட்டாங்களே...!


Click it and Unblock the Notifications











