தொடங்கியது 'ராணா' போட்டோ ஷூட்!

படத்தின் நாயகன் ரஜினியும், நாயகி தீபிகா படுகோனும் இந்த போட்டோ செஷனில் பங்கேற்றனர்.
ஏப்ரல் இறுதி வாரத்தில் ராணாவின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. அதற்கு முன் இந்தப் படத்தின் துவக்கவிழாவுக்கான அழைப்பிதழ்கள், விளம்பரங்கள் மற்றும் போஸ்டர் டிஸைன்களை வடிவமைக்க இந்த போட்டோ ஷூட் நடத்தப்படுகிறது.
இந்தப் படத்தில் ஏழு ஹீரோயின்கள் என்று அறிவித்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார். தீபிகா படுகோன் தவிர வேறு யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இலியானா, அனுஷ்கா என பலருடனும் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினிக்கான அறிமுகப் பாடல் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சரித்திரக் கதை, ஏராளமான பாத்திரங்கள் என்பதால், நிறைய பெரிய நட்சத்திரங்கள் கவுரவ வேடத்தில் வர வாய்ப்புள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications