twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரக்த சரித்திரா... ராம் கோபால் வர்மா மீது வழக்கு!

    By Chakra
    |

    Surya
    உண்மைக்குப் புறம்பான காட்சியமைப்புகளுடன் ரக்த சரித்ரா படத்தை எடுத்துள்ளதாகக் கூறி இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஆந்திரா ரவுடி பரிதாலா ரவி மற்றும் அவரைக் கொன்ற சூரி ஆகியோரின் உண்மையான கதையை ரக்த சரித்ரா எனும் பெயரில் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கிறார் ராம் கோபால் வர்மா.

    இந்தப் படத்தில் பரிதாலா ரவி எனும் பாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள்.

    இந்த நிலையில் பரிதாலா ரவியின் கடும் விரோதியாகக் கருதப்படும் மறைந்த அரசியல் தலைவர் ஓபுல் ரெட்டி என்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தங்களின் அனுமதி மற்றும் ஆலோசனையின்றி ராம் கோபால் வர்மா இஷ்டத்துக்கும் இந்தப் படத்தை எடுத்துவிட்டதாகவும், ஓபுல் ரெட்டி பற்றி மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குற்றம் சாட்டியுள்ளனர்.

    "இந்தப் படம் எடுப்பதற்கு முன்பு, பரிதாலா ரவி, ஓபுல் ரெட்டி குறித்த பல்வேறு சம்பவங்களை எங்களுடன் கலந்து பேசிய பிறகே எடுப்பதாக ராம் கோபால் வர்மா கூறியிருந்தார். ஆனால் அவர் ஒருமுறை கூட எங்களைச் சந்திக்கவில்லை. ரவி தொடர்புடைய பல நிகழ்வுகளின் உண்மையான பின்னணி என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ளக் கூட முயற்சிக்கவில்லை.

    நாங்களாகத் தொடர்பு கொண்டு அவற்றை அவருக்கு விளக்க முற்பட்டோம். ஆனால் அப்போதும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    இந்தப் படத்தில் ஓபுல் ரெட்டியை மோசமாகச் சித்தரிக்கும் பல காட்சிகள் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். எனவே எங்களுக்கு இந்தப் படம் தொடர்பான அனைத்து விவரங்கள், காட்சிகளையும் தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது" என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸை, ஓபுல் ரெட்டியின் சகோதரிகள் உஷா ராணி, உமா ராணி பெயரில் அவர்களது வழக்கறிஞர் என் ஆர் கே மோகன் அனுப்பியுள்ளார்.

    ஏற்கெனவே இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது தனக்கு பரிதாலா ரவியின் நண்பர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக ராம் கோபால் வர்மா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

    இந்த வக்கீல் நோட்டீஸ் குறித்து ராம் கோபால் வர்மா கூறுகையில், "இந்த மாதிரி மிரட்டல்கள் எனக்குப் புதிதல்ல. என் படத்தில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று தெரியாமலேயே என் மீது வழக்கு தொடுக்கிறார்கள். ஓபுல் ரெட்டியின் ஆவியே வந்து மிரட்டினாலும் நான் கவலைப் படப் போவதில்லை" என்றார்.

    ஏற்கெனவே, இந்தப் படத்தை தென் மாநிலங்களில் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் இதில் நடித்துள்ள ஹீரோக்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, படத்தை வெளியிட விட மாட்டோம் என கூறியுள்ளனர் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இயக்கத்தினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X