கரீனாவுக்கு சல்மான் ஷாப்பிங்!

Salman Khan with Kareena Kapoor
ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புக்காகப் போனபோது, 'ஃபேர் லேடி' கரீனா கபூருக்கு ரூ 2,50,000 மதிப்புள்ள கைப்பையை பரிசாக அளித்து அசத்தி விட்டாராம் 'பேர் பாடி' சல்மான் கான்.

சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெய்ன் அவுர் மிஸஸ் கண்ணா. இப்படத்தில் சல்மான் கான் ஹீரோ, துணையாக நடித்திருப்பவர் கரீனா கபூர்.

படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவிலும் நடந்தது. அப்போது தினசரி மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் ஷாப்பிங் செல்வதை பொழுதுபோக்காக வைத்திருந்தாராம் கரீனா (நம்மில் நிறைய பேர் ஷாப்பிங்குக்கு வருபவர்களை பார்ப்பதையே பொழுதுபோக்காக வைத்திருப்பதும் வழக்கம்)

பெரும்பாலும் தனியாகத்தான் போவாராம் கரீனா. ஆனால் ஒரு முறை நானும் வர்றேன் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாராம் சல்மான்.

இருவரும் சேர்ந்து ஒரு கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். அப்போது கரீனாவை டோல்ஸ் அன்ட் கப்பானா ரக கைப்பை வெகுவாக கவர்ந்து விட்டது. உடனே அதை எடுத்துக் கொண்டார்.

ஷாப்பிங்கை முடித்து விட்டு பில்லைக் கட்ட கவுண்டருக்குப் போனபோது கைப்பைக்கான தொகையை வாங்க மறுத்துள்ளார் பில் கவுண்டரில் இருந்த பெண்.

ஏன் என்று கேட்டபோது ஏற்கனவே பில் கட்டியாச்சே என்று கூறியுள்ளார் அவர். அடடா, நமக்காக பில்லைக் கட்டிய ஆத்மா யாரப்பா என்று கரீனா வியப்புடன் நின்றபோது நான்தான் என்று சிரித்தபடி வந்தாராம் சல்மான். இனிய அதிர்ச்சியாகி விட்டதாம் கரீனாவுக்கு.

அழகான கரீனாவுக்கு சல்மான் கொடுத்த பரிசாம் இது.

அது சரி, 'சைஸ் ஜீரோ'வில் இருப்பவருக்கு 'சிக்ஸ் பேக்' கொடுத்த பரிசு இது. இதுவே கோபுரங்கள் சாய்வதில்லை சுஹாசினி கணக்கில் இருந்தால் டீ கூட வாங்கிக் கொடுக்க மாட்டாக...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X