ஷாருக் டாப் - ஐஸ்வர்யாவுக்கு சரிவு

கடந்த ஆண்டு ஷாருக் கான் ரூ. 34.45 கோடி வரி கட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை அக்ஷய் குமார் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கட்டிய வருமான வரி ரூ. 33 கோடியாகும்.
இருப்பினும் இந்த நிதியாண்டில் அவர் ஷாருக்கை முந்தி விடுவார். இந்த நிதியாண்டின் முதல் பாதியில் ஷாருக் ரூ. 3.5 கோடி அட்வான்ஸ் வரியாக கட்டியுள்ளார். ஆனால் அக்ஷய் குமார் 4.5 கோடி கட்டியுள்ளார்.
இருவரும் இந்த நிதியாண்டில் ரூ. 30 முதல் 50 கோடி வரை வருவாய் ஈட்டுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
3வது இடத்தை சல்மான் கான் பிடித்துள்ளார். அவர் கட்டிய வருமான வரி ரூ. 14 கோடியாகும். ஹ்ரித்திக் ரோஷன் கட்டிய வரி ரூ. 14 கோடி.
ஆமிர்கான் கடந்த ஆண்டு கட்டிய வருமான வரி ரூ. 11.32 கோடியாகும்.
சைப் அலிகான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகியோர் கடை நிலையில் உள்ளனர். சைப் ரூ. 8.6 கோடியும், ஐஸ்வர்யா ராய் ரூ. 4.8 கோடியும் வரியாக கட்டியுள்ளனர்.
புதுமுகமான ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு ரூ. 1.8 கோடி வரி கட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











