பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஷெர்லின் சோப்ரா

இவ்வாறு வெளியேற்றப்படவுள்ள 3வது நபர் ஷெர்லின். ஷெர்லினை வெளியேற்ற வேண்டும் என்று கோரி நான்காவது முறையாக அந்த வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் ஷெர்லின் வெளியேற்ற்படுகிறார்.
இந்த வீட்டில் ஷெர்லின் ஒரு மாதம் தங்கியிருந்தார். அதேபோல தாராசிங்கின் மகன் பிந்துவையும் வெளியேற்ற ஓட்டுப் போட்டுள்ளனர் போட்டியாளர்கள்.
ஏற்கனவே ராக்கி சாவ்ந்த்தின் தாயார் ஜெயா, நடிகர்-தயாரிப்பாளர் கமால் கான் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், ஷெர்லின் சோப்ரா வைல்ட் கார்ட் ரவுண்டு மூலம் மீண்டும் வீடு திரும்ப வாய்ப்புள்ளது.
சமீபத்தில் வெளியான ராணி முகர்ஜி நடித்திருந்த தில் போலே ஹடிப்பா படத்தில் ஷெர்லின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications