மணியின் உதவி இயக்குநர் சிம்ரன்!!

தமிழ் சினிமாவில் ஒல்லியான கவர்ச்சிபுயலாக வந்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் சிமரன்.
ஆனால் திருமணத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவை அலட்சியப்படுத்தியவர், எந்தத் தயாரிப்பாளரையும் சந்திப்பதற்கே மறுத்து வந்தார்.
குழந்தை பிறந்து, கல்யாண வாழ்க்கை சாதாரண நிலைக்கு வந்த பிறகுதான் அவருக்கு மீண்டும் தமி்ழ்ப் படவுலகம் நினைவுக்கு வந்தது. உடனே டெல்லியிலிருந்து மீண்டும் சென்னைக்கு ஜாகை மாறினார். ஆனால் அதற்குள் தமிழ் சினிமா அவரை மறந்துவிட்டது.
எவ்வளவோ போராடியும் அவருக்கு மீண்டும் நாயகி வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டது. மசாலாத் தூள் விளம்பரம், நகை விளம்பரம், பட்டுப்புடவை விளம்பரம், தொலைக்காட்சித் தொடர்கள்... எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டார்.
ஆனால் அக்கா, அண்ணி அல்லது திரையில் வயதான கெட்டப்பில் வரும் ஹீரோவுக்கு ஜோடி ஆகிய பாத்திரங்கள்தான் வந்தன. வேறு வழியில்லை எனப் புரிந்துகொண்ட சிம்ரன், இப்போது கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு ஒரு ஆசை வந்துவிட்டது. எப்படியாவது மணிரத்னம் படத்தில் அவருக்கு உதவி இயக்குநராக சேர்ந்துவிட வேண்டும் என்பதே அந்த ஆசை. ஏற்கெனவே மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் உள்ளவர் சிம்ரன். அந்த உரிமையில் அவரிடம் வாய்விட்டுக் கேட்டுவிட்டார்.
இதையடுத்து ஐஸ்வர்யா -விக்ரம் -அபிஷேக் பச்சன் நடிக்கும் அசோகவனம்' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











