சீமானுக்கு ஸ்டெபி நோட்டீஸ்

பிரபல சினிமா டைரக்டர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன். இவர் மீது பெண் உதவி இயக்குனர் ஸ்டெபி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த ஸ்டெபி, ரகுவண்ணன் என்னை ரகசிய திருமணம் செய்து விட்டு இப்போது ஏமாற்ற பார்க்கிறார் என்று கூறினார். மேலும் ரகுவண்ணன் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளையும் அவர் வெளியிட்டார்.
ஸ்டெபியின் புகார் மனு குறித்து வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் முத்தமிழ்மணி விசாரணை நடத்தி வருகிறார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த ஸ்டெபி, டைரக்டர் சீமான் மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த சீமான், ஸ்டெபியைக் கடுமையாக சாடியிருந்தார். அவர் மீது ஆசிட் ஊற்றுவதுதான் என் வேலையா, குடும்பப் பெண்ணாக இருந்தால் ரகுவண்ணனுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை அவர் வெளியிடுவாரா என்றும் காட்டமாக கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சீமானுக்கு ஸ்டெபி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், என்னைப் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்துக்களால் எனது மனது மிகவும் புண்பட்டுள்ளது. நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
என்னப்பற்றி தவறான கருத்துக்களை நீங்கள் கூறியுள்ளீர்கள். எனவே என்னைப்பற்றி நீங்கள் தெரிவித்த கருத்துக்காக 10 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது வழக்கு தொடருவேன் என்று அதில் ஸ்டெபி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, ரகுவண்ணனை விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை உத்தரவிட்டும் அவர் இன்னும் போலீஸ் விசாரணைக்கு வராமல் உள்ளாராம். எனவே அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீஸார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











