தெலுங்கில் அனந்தபுரம் ஆன சுப்பிரமணியபுரம்

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. தமிழில் கேட்ட அதே பாடல்கள்தான். தெலுங்கு வரிகளோடு ரிலீசாகியிருக்கிறது.
மதுரை மண்வாசனை இந்தப் படத்தின் சிறப்பு. அந்தச் சிறப்பு தெலுங்கு பதிப்பில் இருக்குமா...
'நிச்சயம் இருக்கும். காரணம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே அந்தக் காலகட்டத்தில் நிலவிய உடை கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகள் ஒரே மாதிரிதான் இருந்தன. எனவே அதிகபட்சம் பொருந்திப் போகிற மாதிரி காட்சிகள் வந்துள்ளன', என்கிறார் இதன் தெலுங்குப் பதிப்புக்கு சொந்தக்காரரான எம் ரங்கநாத்.
படத்தின் நாயகி ஸ்வாதி தெலுங்கில் ஏற்கெனவே பிரபலம் என்பதால், படத்துக்கு அது ஒரு கூடுதல் பலம்தான்.
படத்தின் நாயகன் ஜெய் தெலுங்குக்காக தன் பெயரை ஆகாஷ் என மாற்றிக் கொண்டுள்ளார். சிம்மபுரி டாக்கீஸ் பேனரில் எம். ரங்கநாத் தயாரிக்கிறார்.
Comments
anandapuram அனந்தபுரம் சசிகுமார் சினிமா சுப்பிரமணியபுரம் தமிழ் தெலுங்கு ஸ்வாதி cinema sasikumar subramanyapuram swathy


Click it and Unblock the Notifications