எந்திரன் ரிலீஸ்-தியேட்டர்களில் விழாக்கோலம்

கடந்த 3 ஆண்டுகளாக எந்திரனுக்காக காத்திருந்த ரசிகர்களின் காத்திருப்பு இன்றோடு முடிந்தது. ரூ. 125 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள எந்திரன் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர்.
தமிழகத்தில், சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 50 தியேட்டர்களில் எந்திரன் இன்று ரிலீஸாகியுள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 காட்சிகளை போடவுள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 தியேட்டர்களில் எந்திரனை திரையிடுகின்றனர்.
எந்திரன் திரைக்கு வந்ததை ரஜினி ரசிகர்கள் பெரும் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் திருவிழாக் கோலமாக காணப்படுகிறது. விதம் விதமான முறையில் படத்தை வரவேற்று அவர்கள் செய்துள்ள ஏற்பாடுகள் படு தடபுடலாக உள்ளது.
aishwarya rai இயக்குநர் ஷங்கர் எந்திரன் எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா ரஜினிகாந்த் director shankar enthiran release rajinikanth tamil cinema


Click it and Unblock the Notifications