'காட்டுப் பய' தருண்கோபி!

அடுத்து அவர் இயக்கும் போகும் படத்தின் தலைப்புதான் இது. வெறும் இயக்கத்தோடு நிற்கவில்லை மனிதர். இம்முறை 'காட்டுப் பய'லாக வேஷம் கட்டப் போகிறவரும் அவரே.
விஷாலை வைத்து திமிரு, சிம்புவை வைத்து காளை ஆகிய படங்களை இயக்கிய தருண் கோபி, அடுத்து மீண்டும் விஷாலிடம் தேதி கேட்டுப் பார்த்தார். ஆனால் அவரோ அடுத்து நானே என்னை இயக்கிக் கொள்ளும் திட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிவிட, ஒரு வைராக்கியத்துடன் தானே ஹீரோவாகிவிட முடிவு செய்தார்.
காளை படத்தை மோசமாக இயக்கியதற்காக கமலா தியேட்டர் வாசலில் தன்னை கருப்பண்ணசாமியின் பெயரால் புரட்டி எடுத்த டி.ராஜேந்தரை மனதில் நினைத்துக் கொண்டு, அப் படத்தின் நூறாவது நாளன்று தனது 'காட்டுப் பய' படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கோபி.
இந்த காட்டுப் பயலுக்கு ஜோடி, திமிரு நாயகி ரீமா சென். கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு ஏற்ற வேடம் இதுதான் என இயக்குநரிடம் மகிழ்ச்சியுடன் கூறினாராம் ரீமா.
இசைக்கு மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவிடம் போய்விட்டார் தருண். ப்ரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகிறது.
படங்களுக்கு நாகரிகமான தமிழ்ப் பெயர்களை வையுங்கப்பா என பலரும் அறைகூவல் விடுத்தும் அடங்க மாட்டேங்கிறாங்களே!


Click it and Unblock the Notifications











