மீண்டும் எம்எஸ்வி, டிஎம்எஸ், சுசீலா!

வாலிபன் சுற்றும் உலகம் என்ற படத்திற்காக இந்த சகாப்த சாதனையாளர்கள் ஒன்று சேருகின்றனர்.
ஸ்ரீ ஜெய் சக்தி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. லலிதசாமி இப்படத்தை இயக்குகிறார்.
எம்.ஜி.ஆர். போலவே காட்சி அளிக்கும் எம்.ஜி.ஆர். சிவா நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி அவருடைய ஜோடியாக வருகிறார்.
இப்படத்திற்காகத்தான் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்., பி.சுசீலா ஆகியோர் இணைகின்றனர். பாடல்களை வாலியும், காமகோடியானும் புனையவுள்ளனர்.
சமீபத்தி்ல காமகோடியான் எழுதிய தாட் பூட் தஞ்சாவூர் என்ற பாடலை கோதண்டபாணி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்தனர். பல வருடங்களுக்குப் பிறகு டி.எம்.செளந்தரராஜனும், பி.சுசீலாவும் சேர்ந்து பாடினர்.
மறுபடியும் தேடி வரும் தென்றலை வேண்டாம் என்போமா, வரட்டும், வரட்டும்!
Comments


Click it and Unblock the Notifications