2 படம்-8 நாடு-ஒரே குறிக்கோள்!

By Staff

Mahesh Bhatt, Pooja Bhat, and Kangana Ranaut
ஒரே பொருளிலான 2 படங்கள் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை எட்டு நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்கள் உருவாக்கி வருகின்றனர் என்பதுதான் இதில் முக்கியமானது.

இந்தப் படம் வேறு யாரைப் பற்றியும் அல்ல - அகிம்சை, அன்பு ஆகியவற்றைப் போதித்த கெளதம புத்தர் குறித்த படம்தான்.

ஒரு படத்தை இயக்குநர் மகேஷ் பட் தனது மகளும், நடிகையுமான பூஜா பட்டுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து தெற்காசிய பவுண்டேஷனிந் செயலாளர் ராகுல் பரூவா கூறுகையில், கடந்த ஆண்டே பட்டின் படம் திட்டமிடப்பட்டது. இருப்பினும் தீவிரவாதம் முதல் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் தற்போது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் முடிந்து விடும் என்றார்.

இந்தப் படத்தில் எட்டு நாடுளைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகையர் நடிக்கவுள்ளனர். அதேபோல இந்த எட்டு நாடுகளைச் சேர்ந்த 8 இயக்குநர்களும் இதில் பங்கேற்றுள்ளனராம் - அதாவது இயக்கியுள்ளனர்.

தனிப்பட்ட ஒரு நாட்டின் படமாக அல்லாமல் எட்டு நாடுகளுக்குமான படமாக இந்தப் படம் உருவாகி வருவதாக பரூவா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X