விவேக்கின் திருக்குறள் பணி!

ஒரே மாதிரி காட்சிகளில் அடிக்கடி வந்து கொண்டிருப்பது ரசிகர்களைக் கடுப்படித்து விட்டதைப் புரிந்து கொண்டதால், தனது அடுத்த படத்தில் முழுக்க முழுக்க வித்தியாசமாக திருக்குறளை அடிப்படையாக வைத்து காமெடிக் காட்சிகளை அமைக்க உள்ளாராம்.
ஆர்.பாலு இயக்கத்தில் ஆனந்த கண்ணன், வர்ஷினி நடிக்கும் 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?' படத்தில் தமிழ்தாசன் என்ற வேடத்தில் நடிக்கும் விவேக், திருக்குறளுக்கு தனது பாணியில் விளக்க உரை தரப்போகிறாராம்.
அவரது ஒவ்வொரு காமெடி காட்சி முடிவிலும் ஒரு குறள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்வது போல அமைத்திருக்கிறார்களாம்
பரவாயில்லையே.. நல்ல யோசனையாக உள்ளதே... என்று விவேக்கைக் கேட்டால்,
"இந்த மாதிரி காட்சிகளை அமைக்கலாம் என்ற யோசனைக்குக் காரணமே இயக்குனர் எஸ்பி முத்துராமன்தான். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதன் முடிவில் ஒரு திருக்குறளைச் சொல்வது அவர் வழக்கம். அதையே சினிமாவிலும் சொன்னால், ரசிகர்களை எளிதில் சென்றடையும் என்று நினைத்தேன்.
என் கருத்துக்கு டைரக்டர் பாலு உடன்பட்டார். நான் வருகின்ற ஒவ்வொரு காட்சி முடிவிலும், ஒரு திருக்குறளைச் சொல்கிறேன். அதற்கு எளிமையான விளக்கமும் கொடுக்கிறேன்... எல்லா தரப்பு ரசிகராலும் இதைப் புரிந்துகொண்டு ரசிக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.


Click it and Unblock the Notifications











