பிரேமப்பிரியாதான் வேண்டும் - விவேக்கின் அடம்!

வசனங்களில் மட்டுமல்லாமல், கூட நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும் வெயிட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேக்கின் வழக்கம்.
சமீப காலமாக அஞ்சுவுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது பிரேமப் பிரியா என்ற நடிகையை தனது ஜோடியாக அறிமுகப்படுத்துகிறார்.
விவேக் நடித்து வரும் படம் இளமை இதோ இதோ. இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பிரேமப்பிரியா. இவர்தான் தனக்கு ஜோடியாக வேண்டும் என்று பிடிவாதமாக கூறி விட்டாராம் விவேக்.
விவேக்கே கேட்டு விட்டாரே, மறுப்பு சொல்ல முடியுமா. இதனால் பிரேமப்பிரியாவையே புக் செய்து விட்டார்களாம்.
பிரேமப்பிரியா சிம்பு, டி.ராஜேந்தர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். தொட்டி ஜெயா, வல்லவன், வீராசாமி படங்களில் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார். டீச்சராகவும் நடித்துள்ளார்.
இப்போது விவேக்குக்கு ஜோடியாகியுள்ளார். படத்தில் காமெடியுடன் கவர்ச்சியும் கொடி கட்டிப் பறக்கிறதாம் விவேக் - பிரேமப்பிரியா சம்பந்தப்பட்ட காட்சிகளில்.


Click it and Unblock the Notifications











