ஆமா, வடிவேலு என்ன பண்ணப் போறாரு?

கடந்த ஆண்டு, சென்னையில் உள்ள வடிவேலுவின் வீட்டை ஒரு கும்பல் தாக்கியது. அதற்குக் காரணம் விஜயகாந்த்தான். அவர் சொல்லி விட்டுத்தான் அவரது ரசிகர்கள் தாக்கினர் என்று புகார் கூறினார் வடிவேலு.
மேலும், எல்லா மக்களையும் சிரிக்க வைக்கிறேன் நான். ஆனால் என்னை அழ வைத்த விஜயகாந்த்தை சும்மா விட மாட்டேன். அவர் எந்தத் தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன், தீவிர பிரசாரம் செய்வேன் என்று சவாலும் விட்டார்.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் வந்துள்ளது. இதில் விஜயகாந்த் போட்டியிடுவதாகத் தெரியவில்லை.
இருப்பினும் வடிவேலுவை விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு எதிராக பிரசாரக் களத்தில் இறக்க முக்கிய கட்சி முயலலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிகவுக்கு எதிராக வடிவேலு பிரசாரம் செய்ய வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது. இருப்பினும் வடிவேலு தரப்பிலிருந்து இதுகுறித்து ஒரு தகவலும் இல்லை.
வருவாரு .. ஆனா வர மாட்டாரு?


Click it and Unblock the Notifications











