யுவன்-செல்வா 'பாய் பாய்'?

செல்வராகவன் இயக்க வந்தது முதல் அவருடைய படங்கள் அனைத்திற்கும் இசையமைத்தவர், அப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.
இது செல்வராகவன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் வரைக்கும் தொடர்ந்தது. ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கு பணப்பிரச்சினை காரணமாக கூறப்பட்டது.
இதையடுத்து படத்திலிருந்து யுவன் விலகிக் கொண்டார். அவருக்குப் பதில் ஜி.வி.பிரகாஷ் குமாரை புக் செய்தார் செல்வா. யுவன் இசையமைப்பில் ரெடியாக இருந்த இரு பாடல்களை தூக்கி கடாசி விட்டு புதிதாக இசையமைத்தார் பிரகாஷ்.
இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென யுவனும், செல்வாவும் சந்தித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் மீண்டும் இணைந்து செயல்பட இருவரும் தீர்மானித்தனராம். இதைத் தொடர்ந்து செல்வாவின் அடுத்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
யுடிவி குழமத்திற்காக செல்வராகவன் தயாரிக்கவுள்ள இரு படங்களுக்கும் யுவன் இசையமைக்கவுள்ளார். இந்தப் படங்களை செல்வாவின் சிஷ்யர்கள் இருவர் இயக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











