'சிலந்தி' நாயகன் முன்னா திருமணம்!

நடிகை ஜெயபாரதியின் தங்கை மகன்தான் இந்த முன்னா. சமீபத்தில் வெளியான கண்டேன் காதலை படத்துலம் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இப்போது மணிரத்னம் டைரக்டு செய்து வரும் ராவணா படத்தில், பிரபு-விக்ரமின் தம்பியாக நடித்து வருகிறார்.
இவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மேரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, கொச்சி அருகில் உள்ள அங்கமல்லி தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
முன்னா-மேரி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அருணா இன் ஹோட்டலில், வருகிற 6ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
முன்னாவுக்கும் மலையாள இயக்குநர் ஐவி சசி மகள் அனுவுக்கும் சில மாதங்களுக்கு முன் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனது குறிப்படத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications