மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் எமி ஜாக்சன்

By Sudha

மதராசப்பட்டினத்தில் தனது அழகான, இயல்பான நடிப்பால் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட எமி ஜாக்சன் மீண்டும் தமிழில் நடிக்கப் போகிறாராம்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எமி ஜாக்சன். இவரை தனது மதராசப்பட்டினத்தில் நாயகியாக நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய். ஆர்யாவுடன் இணைந்து இயல்பான, அழகான, காவியமான நடிப்பை வெளிக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் எமி.

எமியின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியிருந்தார். இவர் பிற்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக ஹாலிவுட்டைக் கலக்குவார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு வருகிறார் எமி. முதல் படத்தில் ஆர்யாவுடன் நடித்த எமி, தற்போது சூர்யாவுடன் ஜோடி போடப் போகிறார். படத்தை இயக்கப் போவது நாயகிகளுக்கு பெரும் முக்கியத்துவம் தரும் கெளதம் மேனன்.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் எமி, சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கெளதம் வருவார் என்று தெரிகிறது.

விரைவில் இதுதொடர்பான தகவல்களை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் பட்சி கூறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X