மறுபடியும் பிரகதி-ஆனந்த்பாபு

அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் சிவக்குமார் பாலசுப்ரமணியன் மற்றும் ராஜு வெங்கட்ராமன். இருவரும் ஒளியும் ஒலியும் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதில் பிறப்பு பட நாயகன் பிரபா நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்து அஸ்வதி நாயகியாக நடித்துள்ளார்.
படத்தில் முக்கிய விசேஷம், நீண்ட காலமாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த ஆனந்த் பாபுதான். ஹீரோவின் அண்ணனாக நடித்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ளார் ஆனந்த்பாபு. அவரது மனைவியாக முன்னாள் நாயகி பிரகதி நடித்துள்ளார். இவரும் ரொம்ப காலமாக சினிமா பக்கம் காணப்படாதவர்தான்.
சக்தி செல்லம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இது ஒரு பீரியட் படம். அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த காலத்தை கதைக்களமாக கொண்ட படம் இது.
வித்தியாசமான கதை இது என்பதால் நிச்சயம் மக்களைக் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











