twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படுக்கையறைக் காட்சியில் அசின் - சல்மான்!

    By Shankar
    |

    ரெடி படத்தில் படு நெருக்கமான ஒரு படுக்கையறைக் காட்சியில் அசினும் சல்மான்கானும் வெகு அந்நியோன்னியமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    தமிழில் நடிக்கும் வரை மாடர்ன் உடைகளை மட்டும் அணிந்து நடித்து வந்த அசின், இப்போது பாலிவுட்டில் கவர்ச்சிப் புரட்சியில் இறங்கியுள்ளாராம்.

    சல்மான்கானின் ஜோடியாக அவர் நடித்துள்ள ரெடி படத்திலேயே அந்த கவர்ச்சி யுத்தத்தை ஆரம்பித்துள்ளாராம் அசின். இந்தப் படத்தில் ஒரு படுக்கையறைக் காட்சியில், அசினும் சல்மான்கானும் படு நெருக்கமாக நடித்துள்ளனராம். இந்தக் காட்சி நிச்சயம் பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள்.

    ஏற்கெனவே இருவருக்கும் காதல் இருப்பதாகவும், அசினுக்கு பரிசாக பங்களா வீடு, கார் போன்றவற்றை சல்மான்கான் வாங்கி கொடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக நடித்து தங்களுக்குள்ள தொடர்பை அம்பலப்படுத்தி இருப்பதாக மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

    அடுத்து வரும் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடிக்கவும் அசின் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, ரெடி படத்தில் ஆபாசக் காட்சி எதுவும் இல்லை. நெருக்கமான காதல் காட்சிகள் மட்டுமே உண்டு என்று அந்தப் படத்தின் இயக்குநர் அனீஸ் பாஸ்மி தெரிவித்துள்ளார்.

    English summary
    There have been murmurs making the rounds around how Salman Khan and Asin have shot for a steamy sequence for their forthcoming film Ready. While this indeed sounded surprising, considering the fact that Anees Bazmee directed Ready is expected to be a family affair, a complete silence on part of makers only ignited the rumour further.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X