பாலா படத்தில் மதுஷாலினி

விஷால், ஆர்யாவை நாயர்களாக வைத்து உருவாக்கி வரும் படம்தான் அவன் இவன். இதில் வித்தியாசமான கெட்டப்பில், வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார் விஷால்.
படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோல் செய்துள்ளார். நாயகியாக ஜனனி அய்யர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மது ஷாலினியை இன்னொரு கேரக்டருக்குப் புக் செய்து நடிக்க வைத்து வருகிறார் பாலா.
மது தெலுங்குக்காரர். பாலா மூலமாக வெயிட்டான அறிமுகத்துடன் தமிழுக்கு வருகிறார்.
அவன் இவன் படக் கதை குறித்து ஏற்கனவே சில செய்திகள் யூகமாக வெளியாகியுள்ளன. இருந்தாலும் இதுதான் கதை என்று கூற முடியாத அளவுக்கு அத்தனை அட்டகாசமான கதையமைப்பு என்கிறார்கள் படக்குழுவினர்.
இப்படத்தின் மூலம் விஷால் மிகப் பெரிய உயரத்திற்குப் போவார் என்றும் காதைக் கடிக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு விசேஷம், யுவன் ஷஙக்ர் ராஜாவின் இசை என்று கூறப்படுகிறது. பாலா என்ன கேட்டாரோ அதேபோல பாடல்களைப் போட்டு அசத்தி விட்டாராம் யுவன்.
தற்போது தேனி பக்கம் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பாலா.


Click it and Unblock the Notifications











