நட்சத்திர இரவில் கருணாநிதி-ரஜினி

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், 75வது ஆண்டு பவள விழாவையொட்டி மிகப் பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகளுக்கும், நட்சத்திர இரவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சிறந்த நாடகங்களுக்கான போட்டிகள், சிறந்த திரைக்கதைக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து முன்னணிக் கலைஞர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்றார் அவர்.
பவள விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி, கமல், விஜயகாந்த் தவிரஅனைத்து முன்னணிக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
தற்போது நிறைவு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்தவுள்ளனர். விழா நடைபெறும் இடம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படவுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications