twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலா மீது மீண்டும் வழக்கு?

    By Staff
    |

    Bala
    பிதாமகன் படத்துக்கு திட்டமிட்டதை விட அதிக செலவு செய்துவிட்டதற்காக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் துரைக்கு அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

    ரஜினி நடித்த பாபா படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர்தான் பிதாமகனை எவர்கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு முதல் பிரதி அடிப்படையில் பாலா சொன்ன பட்ஜெட் நான்கு கோடியே ஐம்பது லட்சம்.

    இதற்குமேல் செலவானால் அதற்கு பாலாதான் பொறுப்பு என்றும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் படத்தை முடிக்காதபட்சத்தில், வருடத்திற்கு நான்கு லட்சம் வட்டியுடன் பாலா, துரைக்கு தர வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமே போடப்பட்டது.

    ஆனால், தான் சொன்ன பட்ஜெட்டை விட நான்கு கோடி அதிகம் செலவழித்திருக்கிறார் பாலா. மேலும் திட்டமிட்டதைவிட மேலும் ஒரு வருடம் அதிகம் எடுத்துக் கொண்டாராம். இதனால் தனக்கு பாலா 90 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் துரை.

    காலதாமதமாக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதி இதனை முதலில் தள்ளுபடி செய்தார். துரை மேல் முறையீடு செய்ததில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

    பாலா மீது இப்போது துரை வழக்குத் தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இந்த விவகாரத்தில் படம் வியாபாரமான பிறகு பாலாவுடன் சமரசமாகிவிட்டதாக துரை தெரிவித்திருந்தார். இப்போது நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளதால் மீண்டும் வழக்குத் தொடரப்போகிறாரா என்பது தெரியவில்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X