மதுரையில் அலுவலகம் திறக்கும் தனுஷ்-வெற்றிமாறன்!

பொதுவாக சினிமா என்றாலே, அது கோடம்பாக்கம்தான் என்றாகிவிட்டது. அதற்காகத்தான் கோலிவுட் என்றே செல்லப் பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.
அதனால் எந்தப படம் துவங்கினாலும், அந்தப் படத்துக்கான அலுவலகத்தை சென்னையில் வைத்துக் கொள்வதுதான் வசதியானது என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நினைப்பது இயல்பு. ஆனால் முதல்முறையாக பொல்லாதவன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த படத்துக்கான அலுவலகத்தை மதுரையில் திறக்க முடிவு செய்துள்ளனர்.
படம் துவங்குவதிலிருந்து ரிலீஸ் ஆகும் வரை இந்த அலுவலகம் மதுரையிலேயே இயங்கும். படப்பிடிப்புக் குழு, கலைஞர்கள் அனைவரும் மதுரையிலேயே தங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஏன் இந்த முடிவு?
தனுஷ் நடிக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க மதுரையிலேயே நடக்கும் கதையாம். படத்தில் வரும் மொத்த பாத்திரங்களுமே மதுரையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளனவாம். அதனால்தான் இயக்குநர் வெற்றி மாறன் இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெருகிறது.
டிசம்பர் முதல்வாரத்தில் படப்பிடிப்பு மதுரையில் துவங்குகிறது. பட பூஜையும் மதுரையிலேயே நடக்கும் என்று தெரிகிறது.
நட்சத்திரங்களையும் இயக்குநர்களையும் உருவாக்கி அனுப்பி வந்த - அனுப்பிக் கொண்டிருக்கிற மதுரையில் இனி நட்சத்திரங்கள் தங்கப்போவது சந்தோஷ செய்திதானே.
பட்டையைக் கிளப்புங்க பங்காளிகளா!


Click it and Unblock the Notifications











