நடிகர் மீது மத துவேஷ புகார்

இருவரும் மதங்களுக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியுள்ளதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மும்பையின் பாலி ஹில் பகுதியில், நிப்பானா கூட்டுறவுக் கழகம் மூலம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்க முயன்றார் இம்ரான் ஹஷ்மி. ஆனால் தான் முஸ்லீம் என்பதால் வீடு வாங்க அந்தக் கழகம் மறுத்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் இம்ரான்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆணையம், சம்பந்தப்பட்ட கூட்டுறவுக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், சஞ்சய் போதியா என்ற பாஜக தொண்டர் மும்பை போலீஸில் நடிகர் இம்ரான், அவருடன் சேர்ந்து பேட்டி அளித்த இயக்குநர் மகேஷ் பட் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், இம்ரான் ஹஷ்மியும், மகேஷ் பட்டும் இப்போது திடீரென இப்படிப் பேசுவதற்கு என்ன அவசியம். ஏன் இரு பிரிவினருக்கிடையே பிளவை, மோதலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பேச வேண்டும்.
மகேஷ் பட் தன்னை மதச்சார்பற்றவராக கூறிக் கொள்வார். ஆனால் இப்போது குறிப்பிட்ட மதத்திற்கு சார்பாக அவர் ஏன் பேசியிருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தனது மனுவில் போதியா கோரியுள்ளார்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வீட்டை தான் விற்கும் முடிவை கை விட்டு விட்டதாக அதன் உரிமையாளர் சுவர்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











