நடிகர்களின் வீர வணக்கம்
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின்போது வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
195 பேர் பலியானதை நினைவு கூறும் வகையில், 195 ரோஜாப் பூக்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றுக்கு முன்பு கூடிய நடிகர், நடிகைகள், தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் அனைவரும் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், தனுஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர்.
Comments
அஞ்சலி சினிமா தமிழ் நடிகர் நடிகையர் மும்பை தீவிரவாதத் தாக்குதல் cinema film artitstes mumbai terror tribute


Click it and Unblock the Notifications