நான் சென்னைப் பொண்ணு- நிக்கோல்

By Staff

Nicole
ஹாலிவுட்டை ஆட்டிப் படைக்கும் நிக்கோல் போல கோலிவுட்டிலும் ஒரு நிக்கோல் இருக்கிறார். இவர் அடடா என்ன அழகு படம் மூலம் அடடே என்னா ஒரு அழகு என ரசிகர்களை வியப்படைய வைக்கப் போகும் அழகி.

நிக்கோல் என்ற பெயரைக் கேட்டவுடன், எந்த ஊரோ, என்ன பேரோ என்று கேட்கத் தோன்றும். ஆனால் நிக்கோல், பக்கா மெட்ராஸ் பொண்ணு.

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தானாம். தமிழை தமிழாகவே பேசுகிறார் நிக்கோல்.

நிக்கோலின் அம்மாவுக்கு ஹாலிவுட் நிக்கோலை ரொம்பப் பிடிக்குமாம். இதனால்தான், தனது மகள் நடிக்க வந்தபோது நிக்கோல் என்று பெயர் வைத்து விட்டாராம் அம்மா.

நிக்கோலுக்கு 16 வயதுதான் ஆகிறதாம். அம்மாவுக்கு நிக்கோலைப் பிடித்தாலும் நிக்கோலுக்கு ரொம்பப் பிடித்தது பூமிகாவைத்தானாம். தனக்கும் கூடி பூமிகாவின் சாயல் லேசாக இருப்பதாக பெருமையோடு கூறுகிறார் நிக்கோல்.

ஜெய் ஆகாஷுடன் இணைந்து நடிக்கும் அடடா என்ன அழகு படம்தான் நிக்கோலின் முதல் படம். முதல் படத்திலேயே முடிந்தளவுக்கு கிளாமரைப் பரப்பியுள்ளார் நிக்கோல்.

தமிழுக்குத்தான் நிக்கோல் புதிதாக இருந்தாலும், தெலுங்கில் நிக்கோல் அங்கு நிற்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பிசியான நடிகையாம்.

நிக்கோலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடிக்கும் வாய்ப்பும் முன்பு தேடி வந்ததாம். சந்திரமுகியில், நயனதாரா நடித்துள்ள வேடத்தில் இவர்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அப்போது டோலிவுட்டில் படு பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். இதனால்தான் சந்திரமுகி படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம் நிக்கோலுக்கு.

'வைக்கோல்' மாதிரி நிற்காமல், வளமையாக நடித்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X