இது சீரியஸான மேட்டரில்லை!-ஆக்கர் ஸ்டுடியோ

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படம் கோவா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பாடல் வெளியீ்ட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படம் முதலில் ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் ஆடியோவை ரஜினி பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இரண்டுமே இப்போது நடக்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
காரணம், கோவா படத்துக்கு பைனான்ஸ் செய்த வருண் என்பவர் கோர்ட்டுக்குப் போய் டிசம்பர் 11 வரை படம் வெளியாகக் கூடாது என தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினியின் ரியாக்ஷன் குறித்து அறிய ஆக்கர்ஸ் ஸ்டுடியோவைத் தொடர்பு கொண்டோம்.
சௌந்தர்யா சார்பில் பேசிய அவரது உதவியாளர், "இது ஒரு சீரியான மேட்டரே இல்லை. சினிமாவில் இது சாதாரண விஷயம். படத்துக்கு பைனான்ஸ் வாங்கியது உண்மை. அதில் சிறிய தாமதம் ஏற்பட்டுவிட்டது. இனி இந்த விவகாரத்தை ஆக்கர்ஸ் ஸ்டுடியோ பார்த்துக் கொள்ளும். திட்டமிட்டபடி படம் வெளியாகும்" என்றார்.


Click it and Unblock the Notifications











