ஜாக்கியுடன் மோகன்லால்!!

By Staff

Mohanlal and Kavya
ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானுடன் நடிக்கிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.

மோகன்லாலின் லட்சியப் படைப்பு என்று சொல்லும் வகையில் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து அதற்கு நாயர் சென் (NAIR SAN) என்று பெயர் சூட்டியிருந்தார் இயக்குநர் ஆல்பட்.

விடுதலைப் போராட்ட வீரர் அய்யம் பிள்ளை மாதவன் நாயர் என்பவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள்தான் நாயர் சென் திரைக்கதையாக மாறியிருக்கிறது.

இந்தப் படத்தின் நாயகன் மோகன்லால் என்றாலும், அவருக்கு இணையான இன்னொரு பவர்ஃபுல் பாத்திரமும் படத்தில் உள்ளதாம். இந்த வேடத்துக்கு ஜாக்கிசான் மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவருக்கு இந்த ஸ்கிரிப்படைக் கொடுத்திருக்கிறார்கள்.

படித்துப் பார்த்த ஜாக்கியும் தனது சம்மதத்தைச் சொல்லயிருக்கிராராம். ஆனால் இன்னமும் தனது சம்பளம், கால்ஷீட் போன்ற விஷயங்களை கூறவில்லையாம்.

இதுகுறித்து மோகன்லால் கூறியதாவது:

நாயர் சென் எனது லட்சியப் படம். இந்தக் கதையின் நாயகனைப் பற்றி எனது தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது அந்தப் பாத்திரமாகவே நடிக்கப் போகிறேன். உலகில் ஆச்சரியங்கள் எப்போது எங்கு நிகழும் என யாருக்கும் தெரியாது. அப்படியொரு ஆச்சரியம் எனக்கு இந்தப் படம் கிடைத்திருப்பது. கடந்த ஓராண்டு காலமாக இந்தக் கதையை பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர். ஜாக்கிசான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார்.

இந்தக் கதையின் பெரும்பகுதி மங்கோலியா நாட்டிலும், சீனாவிலும் நடைபெற உள்ளதால் தொடர்ந்து 125 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் மோகன்லால். மலையாளத்துடன் சீனா, ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X