தீபாவளி-இது கமல் ஸ்பெஷல்!
இந்த தீபாவளிக்கு கமல் ஹாஸன் தனது பேவரைட் டிவியான விஜய்யில் தோன்றுகிறார்.
அனுஹாஸன் நடத்தும் காஃபி வித் அனு சீஸன் 3-ல் கமல்தான் சீஃப் கெஸ்ட்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பேட்டி காணும் அனு ஹாஸன், கமலின் அண்ணன் சந்திரஹாஸனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் நளதமயந்தி படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் பேட்டியில், பரமக்குடியில் தொடங்கிய தனது பள்ளி வாழ்க்கையிலிருந்து, ஐந்தே வயதில் அத்தனை பெரிய ஸ்டுடியோக்களிலும் நடிகராக நுழைந்த சாதனை, முதல் ஷூட்டிங் அனுபவம், அப்பாவுடனான தோழமை, தாயின் பாசம், நடிப்பு தவிர்த்த இதர விருப்பங்கள், இதுவரை வெளிப்படாத கமல் எனும் இசைக் கலைஞன்... இப்படி பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான நெருக்கம், இருவரும் எதிர்நோக்கிய சவால்களையும் அவர் இந்த நிகழ்ச்சியில் கூறுகிறார்.
ஆல்பம் பகுதியில், இதுவரை ரசிகர்கள் பார்க்காத கமல் புகைப்படங்களை வெளியிடவிருக்கிறார்கள்.
ஆக தீபாவளிக்கு உலகநாயகனின் திரைவிருந்து இல்லையே என்ற கவலை அவரது ரசிகர்களுக்கு அவசியம் இல்லை... சின்னத் திரையில் மெகா விருந்து காத்திருக்கிறது!
தீபாவளி நவம்பர் 5ம் தேதி வருகிறது. நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











