'வெட்டோசி சுந்தரம்' கரண்!

சாமிடா என்ற படத்தை இயக்கியவர் வடிவுடையான். இவர் அடுத்து நாஞ்சில் ஐந்தாம் திசை என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க பேசப்பட்டிருந்தார்.
இப்போது இரண்டுமே மாறி விட்டது. நாயகனாக கரண் நடிக்கிறாராம். படத்தின் பெயரையும் தம்பி வெட்டோசி சுந்தரம் என மாற்றி விட்டனர்.
வெட்டோசி சுந்தரத்தின் கதை நாகர்கோவிலைப் பின்னணியாகக் கொண்டது. வெட்டோசி என்றால் நாஞ்சில் நாட்டு பாஷையில், வெட்டுக்கத்தி என்று பெயராம்.
இப்படத்தின் நாயகியாக நடிக்க சுமித்ராவின் 2வது மகள் தீப்தியை அணுகியுள்ளனர். தீப்தி, கன்னடத்தில் நாயகியாக அறிமுகாகியுள்ளார். அங்கு அவரது பெயர் நக்ஷ்த்ரா.
சரிகம என்ற படம் மூலம் கன்னடத்தில் நாயகியாகியுள்ள வெட்டோசி மூலம் தமிழுக்கும் வருவாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











