கமல், ரஜினியுடன் படம் பார்த்த முதல்வர்!

கருணாநிதியின் கதை, வசனத்தில், இளவேனிலின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் உளியின் ஓசை. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு படத்தைப் பார்த்தார். அவருடன் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் உடனிருந்து படத்தை ரசித்தனர்.
இவர்கள் தவிர முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி, தி.க. தலைவர் கி.வீரமணி, சிவக்குமார், சத்யராஜ், பாக்யராஜ், பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் படம் பார்த்தனர்.
படம் முடிந்து வெளியில் வந்த ரஜினி, உளியின் ஓசை திரைப்படம் அற்புதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார். கலைஞர் காலத்தை வென்ற படைப்பாளி என்பதை அவரது ஒவ்வொரு வசனமும் நிரூபிக்கிறது என்றார் ரஜினி.
கலைஞரின் படைப்புக்கு என்றும் நரை, மூப்பு கிடையாது என்று புகழ்ந்தார் பாரதிராஜா.
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், இந்தப் படம் அனைத்து வித கமர்ஷியல் அம்சங்களுடன் கலையம்சமும் கொண்டதாகத் திகழ்வதாகக் கூறினார்.
வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளை 'உளியின் ஓசை' எட்டவுள்ளது.


Click it and Unblock the Notifications











