அபியும் நானும்-கருணாநிதியும் கனிமொழியும்!

By Staff

Kanimozhi with Karunanidhi
பிரகாஷ் ராஜின் டூயட் மூவீஸ், மோசர் பேர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'அபியும் நானும்' திரைப்படத்தின் இசையை தமிழக முதல்வர் கருணாநிதியும் அவர் மகளும் எம்பியுமான கனிமொழியும் வெளியிடுகிறார்கள்.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா...

அபியும் நானும் படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பைச் சொல்லும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே நிஜ வாழ்க்கையில் தந்தை-மகள் பாசத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் இந்த இசையை வெளியிட வேண்டும் என பிரகாஷ் ராஜ் நேரில் சென்று முதல்வரைக் கேட்டுக் கொண்டாராம். கூடவே தனது 3 வயது மகளையும் அழைத்துப் போயிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

இதனால் நெகிழ்ச்சியடைந்த முதல்வர் கருணாநிதி விழாவுக்கு வர ஒப்புதல் தெரிவித்துள்ளார். 27ம் தேதி நடைபெறும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் மகளுடன் கலந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்தப் படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ராதா மோகன் கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகிறது அபியும் நானும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X