கன்னடத்தில் குசேலன்

சீனிவாசனின் கதையான கத பறயும் போள் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம். அப்படத்தைத்தான் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரஜினிகாந்த் நடிக்க முறையே குசேலன், கதாநாயகடு என்ற பெயர்களில் ரீமேக் செய்துள்ளனர்.
அதேபோல இந்தியிலும் இப்படம் ரீமேக் ஆகி வருகிறது. அதில் ஷாருக் கானும், இர்பான் கானும் நடிக்கின்றனர். பிரியதர்ஷன் இப்படத்ைத இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் குசேலன், கன்னடத்திற்கும் போகவுள்ளது. இப்படத்தில் நடிக்க ரமேஷ் அரவிந்தை அணுகியுள்ளனராம். இதுதொடர்பான முழு விவரங்களும் விரைவில் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.
ஏற்கனவே கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன ஆப்தமித்ராதான் தமிழில் சந்திரமுகியாக உருமாறியது. இப்போது தமிழின் டர்ன். தமிழில் உருவாகியுள்ள குசேலன் கன்னடத்திற்கு மாறுகிறது.
ஒருத்தருக்கொருத்தர் போட்டு வாங்கிக்க வேண்டியதுதானே!
Comments


Click it and Unblock the Notifications