மேடையில் இரண்டு முறை மயங்கி விழுந்த மடோனா

51 வயதாகும் மடோனா அந்த வயதே தெரியாத அளவுக்கு கட்டுக்கோப்பான உடலமைப்பும், ஆரோக்கியமான நிலையிலும் இருப்பவர். இந்த நிலையில் பல்கேரியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடோனா இருமுறை மயங்கி விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல்கேரியாவின் சோபியா நகரி்ல ஸ்டிக்கி அன்ட் ஸ்வீட் என்ற நிகழ்ச்சியில் மடோனா கலந்து கொண்டார்.
மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது அவர் முதலில் ஒருமுறை அவர் மயங்கி விழுந்தார். அப்போது உடன் ஆடிய டான்சர், அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஸ்பானிஷ் லெஸ்ஸன் என்ற பாடலைப் பாடி ஆடியபோது மீண்டும் மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் வழக்கமாக மடோனா குறைந்த நேரமே இடைவெளி விடுவார். ஆனால் இந்த நிழ்ச்சியின்போது நீண்ட இடைவெளியை அவர் நாடினார். பார்க்கவே மிகவும் களைப்பாகவும் காணப்பட்டார். இருப்பினும் நிகழ்ச்சியை ரத்து செய்ய விரும்பாமல் தொடர்ந்து நடத்த அவர் ஆர்வமாக இருந்தார் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











