மெகா டிவியின் நீ பாதி நான் பாதி

குடும்பத்துடன் குதூகளிக்கும் கலகலப்பான இந்த நிகழ்ச்சி நேயர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மெகா டிவியில் ஞாயிறு தோறும் இரவு 8.00 மணி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர்கள் விருவிருப்பான நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும். முதல் சுற்றில் ஒரேவகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். 3-வது சுற்றில் கண் கட்டப்பட்ட கணவருக்கு பரிசை எடுக்க மனைவி வழிகாட்ட வேண்டும்.
இறுதிச் சுற்றில் தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் குதூகலிக்கும் இந்த நிகழ்ச்சியினை கலகலப்பான கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்குகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷியாம் கணேஷ்.


Click it and Unblock the Notifications











