twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெகா டிவியின் நீ பாதி நான் பாதி

    By Staff
    |

    Mega TV in Nee padhi Naan Padhi
    பல பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மெகா தொலைக்காட்சியில் மனைவியின் கை பக்குவத்தை கணவர் கண்டுபிடிக்கும் கலகலப்பான போட்டி சுற்றுக்களுடன் புதுப்பொலிவுடன் களம் இறங்கியுள்ளது நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி.

    குடும்பத்துடன் குதூகளிக்கும் கலகலப்பான இந்த நிகழ்ச்சி நேயர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மெகா டிவியில் ஞாயிறு தோறும் இரவு 8.00 மணி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர்கள் விருவிருப்பான நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும். முதல் சுற்றில் ஒரேவகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும்.

    அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். 3-வது சுற்றில் கண் கட்டப்பட்ட கணவருக்கு பரிசை எடுக்க மனைவி வழிகாட்ட வேண்டும்.

    இறுதிச் சுற்றில் தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் குதூகலிக்கும் இந்த நிகழ்ச்சியினை கலகலப்பான கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்குகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷியாம் கணேஷ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X