twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    200-ஐ தொட்ட பெண்கள்.காம்!

    By Staff
    |

    MEGA TV Pengal. com
    பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெகா டிவியின் பெண்கள்.காம் நிகழ்ச்சி கடந்த வாரம் 200-ஐ தொட்டது.

    மெகா டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை, ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த பெண்கள்.காமில், பெண்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும், பல்வேறு பகுதிகளாக ஒளிபரப்பப்படுகிறது.

    மெகா டி.வி எப்போதும் குழந்தைகளுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அதிக கவனம் செலுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் பெண்கள்.காம் நிகழ்ச்சி பெண்களின் அறிவு திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு அற்புத தகவல்களை வழங்கி வருகிறது.

    இதில் புதுபுதுசுதான் பகுதியில் சந்தைக்கு புதிதாக அறிமுகமாகி இருக்கும் புதிய ரக ஆடைகள், அலங்கால நகைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றை உபயோகம் படுத்துவது குறித்தும், பராமரிப்பது குறித்தும் அழகாக எடுத்துரைகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோதினி.

    அடுத்து வரும் கலையும் கைவண்ணமும் பகுதியில் நாமே வீட்டு அலங்காரப் பொருட்களை தயார் செய்வது குறித்து, செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகிறது.

    அம்மாயி சமையல் பகுதியில் பாரம்பரியம் மிக்க பழமையான உணவு வகைகளை சமைப்பது குறித்தும், ஆரோக்கியமான உணவு வகைகள் தயாரிப்பது குறித்தும் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோதினி. இதே பகுதியில் வரும் ருசியோ ருசியில் புது விதமான உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.

    தெரிந்ததும் தெரியாததும் பகுதியில் காய்கறிகள், மூலிகைகள் பற்றி நாம் அறிந்தும் அறிந்திடாத பல அற்புத தகவல்களை நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

    இறுதியாக வரும் டிப்ஸ் ஸ்பெஷல் பகுதியில் உடல் அழகை பாதுகாத்து பராமரிப்பது குறித்து பல பயனுள்ள குறிப்புகளை வழங்குவதுடன், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்வதன் மூலமாக உடல் அழகை பராமரிப்பது குறித்த அழகு டிப்ஸ்சுகளை வழங்குகிறார் வினோதினி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X