ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட முதல்வர் கருணாநிதியின் பாட்டு!

By Sudha

Meera Jasmine and Udhay Kiran
பெண் சிங்கம் படத்தில் முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலை மீண்டும் மீண்டும் திரையிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

மீரா ஜாஸ்மின், உதய் கிரண், ஜே கே ரித்தீஷ் நடித்துள்ள படம் பெண் சிங்கம். முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாடலையும் எழுதியுள்ளார் முதல்வர்.

'ஆகா வீணையில் எழுவது வேணு கானமா?' என்று துவங்கும் அந்தப் பாடல் சுவிட்ஸர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பெண்சிங்கம் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தபோது, பாடல்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பிட்ட இந்தப் பாடலும் காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக அனைவரும் பாராட்டினர். ரசிகர்கள் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் முதல்வர் எழுதிய இந்தப்பாடலை மட்டும் மீண்டும் திரையிட்டுக் காட்டினர்.

பாடலைக்கேட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டனர் இந்தப் பாடலை.

விழாவில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், கவிஞர்கள் வாலி, வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று, முதல்வர் எழுதிய பாடலைப் புகழ்ந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெயமுருகன், ஆறுமுகனேரி முருகேசன் ஆகிய இருவரும் வரவேற்றார்கள். இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம் நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு, பெண் சிங்கம் தயாரிப்பாளர்கள் ஜெயமுருகனும், ஆறுமுகனேரி முருகேசனும் பொன்னாடை அணிவித்து, முதல்வர் கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X