கதை திருட்டு-சபா மீது பிரகாஷ்ராஜ் புகார்

By Staff

Bhoomika and Srikanth
'மா' படத்தின் கதையை வைத்து தன் அனுமதியில்லாமல் வேறொருவருக்கு படம் பண்ணுகிறார் என இயக்குனர் சபா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பிரகாஷ் ராஜ் புகார் கொடுத்துள்ளார்.

'விஐபி' படம் மூலம் இயக்குனரானவர் எஸ்.டி.சபா. பிரகாஷ் ராஜ் நடிப்பில் 'நாம்' என்ற படத்தை இயக்கினார். அப்போது 'மா' என்ற தலைப்பில் பிரகாஷ் ராஜிடம் ஒரு கதையை கூறினார் சபா. இந்த கதை பிரகாஷுக்கு பிடித்திருந்தது.

இதனால் தனது டூயட் மூவிஸ் மூலம் படத்தை தயாரிப்பதாக அவர் தெரிவித்தார். இதற்காக சபாவுக்கு ஒரு தொகை முன் பணமாக தந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் இப்படம் தொடங்கவில்லை. இடையில் பிரகாஷ் ராஜ் தயாரித்த 'பொய்', 'வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால், 'மா' படத்தை அவர் தொடங்கவில்லை.

இதனால் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் இப்படத்தை இயக்கப் போவதாக சபா தெரிவித்தார். இதில் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ், பூமிகா நடிக்கின்றனர்.

இதில் நடிக்கும் தனது நண்பர் பிருத்விராஜ் மூலம் படத்தின் கதையை கேள்விப்பட்ட பிரகாஷ் ராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

அதில் தனது தயாரிப்பில் 'மா' படத்தை இயக்க சபா ஒப்பந்தமானதாகவும், ஆனால் தனக்கு தெரியாமல் இப்போது வேறொருவருக்கு இப்படத்தை இயக்குகிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இப்புகார் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சபா, பிரகாஷ் ராஜிடம் விசாரணை நடத்தினர்.

படப்பிடிப்பு துவங்கியது:

இந்நிலையில் 'மா' படத்தின் துவக்க விழாவும் பூஜையும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பிரமாண்டமான முறையில் நடந்தது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட திரையுலகப் புள்ளிகள் பங்கேற்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த்-பூமிகா ஜோடியாக நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X