மிஷ்கின் மீது தயாரிப்பாளர் கடுப்பு

நான் அவனில்லை படத்தைத் தயாரித்தவர் இத்தோஷ் ஜபக். தரம், படமாக்கம், வசூல் என அனைத்து விதத்திலும் இந்த ஆண்டின் ஒரே வெற்றிப் படம் என்ற பெருமைக்குரிய மிஷ்கினின் அஞ்சாதே படத்தையும் இவர்தான் தயாரித்தார்.
சமீபத்தில்தான் இந்தப் படம் நூறு நாட்கள் ஓடி முடித்தது. படத்தின் நூறாவது நாள் விழாவை சென்னை காமராஜர் அரங்கில் நடத்த முடிவு செய்திருந்தார் மிஷ்கின். இதுகுறித்து தயாரிப்பாளரிடம் பேசினார். அப்போது நான் அவனில்லை, அஞ்சாதே மற்றும் இப்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் பாண்டி ஆகிய மூன்று படங்களுக்கும் சேர்த்து முப்பெரும் விழாவாக எடுக்கலாம் என யோசனைத் தெரிவித்திருக்கிறார் இத்தேஷ் ஜபக்.
உடனே மிஷ்கின், அப்படியெல்லாம் பத்தோடு பதினொன்றாக இந்தப் படத்துக்கு விழா எடுக்க முடியாது. நீங்கள் வாருங்கள், இல்லாவிட்டால் நானே விழாவை என் சொந்த செலவில் நடத்திக் கொள்கிறேன், என்று கோபத்துடன் கூறிவிட்டாராம். இதனால் தயாரிப்பாளரான தான் இல்லாமல் மிஷ்கின் இந்த விழாவை நடத்தக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார் ஜபக்.
ஆனால் இந்தப் புகாரையெல்லாம் கேட்கிற மூடில் இல்லை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள். அவர்களுக்கு தேர்தல் கவலை. அது முடிந்த பிறகுதான் எதைப் பற்றியும் பேச முடியும் என்று கூறிவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











