''நமீதாவும் இப்போ தமிழ்ப் பெண்தான்''!

வெரைட்டி சூப்பர் சினிமா இதழின் 2008-ம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் சிறந்த நடிகைக்கான விருதுகள் நமீதா, ஸ்னேகா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நடிகர்கள் ரமணா, பசுபதி, இயக்குநர் ராஜா, இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, இமான் உள்ளிட்ட பல நடிகர்-நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஏவிஎம் சரவணன், சிவஸ்ரீ சீனிவாசன், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதா ரவி, இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.
விழாவுக்கு படு செக்ஸியாக உடையணிந்து வந்து அரங்கையே அதிர வைத்தார் நமீதா.
அவருக்கு விருது வழங்கிய பின் ராதாரவி பேசியதாவது:
ஒரு படம் வெற்றி பெற்றவுடன் நடிகர்கள் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நடிகர், நடிகைகள் சிந்தித்து செயல்பட வேண்டும். தங்கள் தகுதிக்கு மீறிய சம்பளம் கேட்பது சரிதானா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதேபோல இனி தமிழ் நாட்டில் பிறந்த அல்லது தமிழ் தெரிந்த அல்லது குறைந்தபட்சம் தமிழ் கற்றுக்கொண்டு பேசும் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். பத்திரிகைகளும்கூட இதற்கு உதவ வேண்டும்.
நான் ஏதோ நமீதாவைத் தாக்க இப்படிச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நமீதா இப்போது தமிழ் நடிகை ஆகிவிட்டார். தன்னை ஒரு தமிழ்ப் பெண் என்றுதான் சொல்லிக் கொள்கிறார். தமிழைக் கற்றுக் கொள்வதில் அவருக்குள்ள ஆர்வமாவது மற்ற நடிகைகளுக்கு வரவேண்டும் என்றார்.
நமீதாவின் பெயரை அவர் ஒவ்வொரு முறை உச்சரித்த போதும் விசில் பறந்தது அரங்கில்...
நல்ல முன்னேற்றம்!


Click it and Unblock the Notifications











